Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது இப்போ முடியாது… ஸ்க்விட் கேம்ஸ் ரசிகர்களுக்கு இயக்குனர் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (08:02 IST)
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து டிசம்பர் 26 அன்று இரண்டாம் பாகம் ரிலீஸாகவுள்ளது.

சமீபத்தில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.  முதல் சீசனில் விளையாடி பணத்தை வென்ற நபர் மீண்டும் அதே விளையாட்டை உள்ளே வர என்னென்ன திருப்பங்கள் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீரிஸ் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஹ்வாங் டோங் ஹ்யூக் ஸ்க்விட் கேம்ஸ் மூன்றாவது சீசனோடு நிறைவு பெறும். மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டில் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments