Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்த் Squid Games… இரண்டாவது சீசன் பற்றி இயக்குனர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (09:18 IST)
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது தொடரின் இயக்குனர் டாங்- ஹ்யூக் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments