Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது அதுதான் ரொம்ப முக்கியமா? அஜித் வராதது குறித்து எஸ் பி சரண் கருத்து!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:07 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் இறுதி நிகழ்வுக்கு அஜித் வராதது குறித்து எஸ் பி பி சரண் விளக்கமளித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவர் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு உடலுக்கு அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேரில் செல்ல முடியாதவர்கள் வீடியோ மூலமாகவோ சமூகவலைதளங்கள் மூலமாகவோ தங்கள் இரங்கலை பதிவு செய்தனர்.

ஆனால் எஸ் பி சரணின் வகுப்புத் தோழனும், எஸ் பி பியின் நெருங்கிய தோழருய்மாகிய அஜித் வரவில்லை என்பது சர்ச்சைகளை உருவாக்கியது. இதுகுறித்து இப்போது சரண் விளக்கமளித்துள்ளார். அதில் ‘இதுபோன்ற (கொரோனா) சூழ்நிலையில் வரவேண்டும் என அவசியம் இல்லை. அஜித் எனக்கு மிக நல்ல நண்பர். அவர் வந்தாரா இல்லையா என்பது இப்போது முக்கியம் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments