Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

vinoth
புதன், 22 மே 2024 (07:24 IST)
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடித்துள்ள கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில்  மே 31 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

நேற்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அப்போது சூரியை வாழ்த்தி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பேசினர்.

அப்போது சூரியிடம் ஒருநாள் நீங்கள் சிவகார்த்திகேயனாகவும், விஜய் சேதுபதியாகவும் மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு “சிவகார்த்திகேயனாக மாறினால் 10 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி கொள்வேன். அதுவே விஜய் சேதுபதியாக மாறினால் தமிழ் தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், இந்தி தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொள்வேன். அப்படியே ஷாருக் கான், அமீர் கான், தீபிகா படுகோன் ஆகிய எல்லோரையும் பார்த்து பேசிவிட்டு வந்தால் ஒருநாள் முடிந்துவிடும். அதன் பிறகு அவர்கள் பாடு” என ஜாலியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இறந்த செய்தி அறிந்தும் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்தார் அல்லு அர்ஜுன்… தெலங்கானா போலீஸ் குற்றச்சாட்டு!

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments