Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ ஆசையில் பரோட்டா சூரி?? வடிவேலு, சந்தானத்தின் நிலைமையை பார்த்துமா இந்த ஆசை...

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (17:09 IST)
காமெடி நடிகர் பரோட்டா சூரி தற்போது  ஹீரோகளுக்கு இணையாக படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். நடனத்திலும் அசத்தி வருகிறார்.


 
 
இந்நிலையில் அவருக்கு ஹீரோவாக நடிக்க ஆசை வந்துவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக சமீபத்தில் சூரி, நயன்தாராவுடன் டூயட் பாட ஆசைபடுவதாக தெரிவித்திருந்தார்.
 
தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் ஹீரோ ஆசையில் இருந்ததையும் கோட்டைவிட்டி அவதிபடுவதை பார்த்துமா உங்களுக்கு ஹீரோ ஆசை வந்துள்ளது என கிண்டல் கேள்விகளும் எழுந்தது.
 
இந்த செய்தியை குறித்து சூரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களாகி விட்டது. வெண்ணிலா கபடி குழு பரோட்டா கேரக்டரும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் புஷ்பா புருஷன் கேரக்டரும் என்னை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. 
 
சில இயக்குனர்கள் என்னை ஹீரோவாக நடிக்கும்படி கேட்டார்கள். ஆனால், சினிமாவில் என் உயரம் எனக்குத் தெரியும். கடைசி வரை நான் காமெடியனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். 
 
ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் டூயட் பாடி ஆட ஆசை  இருக்கிறது என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments