Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் கருடன் படத்தின் 12 நாள் வசூல் இவ்வளவா?

vinoth
வியாழன், 13 ஜூன் 2024 (07:36 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருடன் படத்தின் இந்த வசூல், சூரி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டதைக் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments