Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதுகவ்வும் 2 படத்தின் இயக்குனர் இவரா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (07:39 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் சூதுகவ்வும் தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னர் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் சி வி குமார் திட்டமிட்டு வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் யங் மங் சங் படத்தின் இயக்குனர் அர்ஜுன் இந்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments