Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (09:22 IST)
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங். இதனால் இந்த பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அவரின் அடுத்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தை மாவீரன் பட தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அர்ஜுன் விஸ்வா தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்த ஹெச் வினோத்!

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

பட்ஜெட் காரணமாக தனுஷ் மாரி செல்வராஜ் படம் கைவிடப்பட்டதா?

தக் லைஃப் படத்தில் நான் இருந்தேன்… ஆனா..? – ஜெயம் ரவி வருத்தம்!

20 வருடத்துக்கு முன்பு ரஜினி சார் சொன்ன அட்வைஸைப் பின்பற்றுகிறேன்.. சூர்யா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments