Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் சேகர் வடிவேலுவுக்கு தேவையில்லை… சிவகார்த்திகேயன் பேச்சு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:51 IST)
நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு நாய் சேகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்காக பொருத்தமாக இருக்கும் என நாய்சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் வடிவேலுவின் முத்திரைக் கதாபாத்திரமான நாய் சேகரை வைத்து இப்போது சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்த படத்துக்காக அந்த தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்தினரிடம் வடிவேலு சார்பாக கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்து நாய்சேகர் என்று தலைப்பை அறிவித்து முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது அந்த போஸ்டரை வெளியிட்டது குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதில் ‘வடிவேலு போன்ற பெரிய நடிகருக்கு எந்த தலைப்பு வைத்தாலும் படம் கவனத்தைப் பெறும். ஆனால் சதீஷுக்குதான் இந்த தலைப்பு அதிகமாக தேவைப்படுகிறது’ என்று கூறி தன் செயலுக்கு நியாயம் கற்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments