Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன் & முருகதாஸ் பட ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (09:26 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துள்ள முருகதாஸ் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தூத்துக்குடியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் இடைவேளையில்தான் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் கோயில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments