Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் இன்ட்ரெஸிட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (12:40 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான "நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது. 
 
அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடிக்கவிருக்கிறார். நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" என்ற படத்தை இயக்கி வருகிறார். KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் கலை இயக்குனர் கிரண் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர்  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்று கூறி படத்தின் இயக்குனர் நெல்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments