Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிக்காக ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன் & விஜய் சேதுபதி!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (07:55 IST)
விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அடுத்து நடித்த கருடன் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று அவரை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ஆக்கியது. அதையடுத்து இப்போது கொட்டுக்காளி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் கலந்துகொண்டு கவனத்தைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்துக்கு சூரி நடிக்கப் போகும் படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சூரி கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தில் அவரின் நெருங்கிய நண்பர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments