Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

vinoth
வியாழன், 14 மார்ச் 2024 (10:15 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான திரைக்கதைப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் படத்துக்காக சில அபிப்ராயங்களை இயக்குனரிடம் சொல்லியுள்ளாராம் சிவகார்த்திகேயன். விநாயக்கின் முதல் படமான குட்னைட் கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத ஒரு ஃபீல்குட் படம். ஆனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் பெருந்திரள் ரசிகர்களை கவரும் அம்சங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அதனால் விநாயக்கிடம் திரைக்கதை கமர்ஷியலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments