Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயி டுவீட்டில் சிக்கிய பிரபல பாடகர்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (14:00 IST)
சின்மயி வெளியீடு வரும் பாலியல் புகார்கள் பற்றிய பிரபலங்கள் வரிசையில் தற்போது பாடகர் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.
சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண் வரிசையில் வரிசையில் தற்போது பாடகர் கார்த்திக்கும் தற்போது இணைந்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறிய பத்திரிக்கையாளர் தனது பக்கத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் ஒருவர் பாடகர் கார்த்திக்கால் பாதிக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதை மறுபகிர்வு செய்துள்ள சின்மயி நேற்றுதான் கார்த்திக்கோடு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனாலும் நான் பாதிக்கப்பட்டவரை நம்புகிறேன். மன்னித்துவிடுங்கள் உங்கள் நேரம் முடிந்துவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டுவீட்டில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாவது ‘சில வருடங்களுக்கு முன் கார்த்திக்கோடு ஒரு பொது நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அப்போது அவர் எனது உடலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். என்னை தொட அடிக்கடி முயன்றார். எனக்கு பயங்கரமான அசௌகர்யத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தினார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரருகில் நிற்கவே நான் அஞ்சும் நிலைக்கு ஆளானேன். பல பாடகிகள் என்னிடம் கார்த்திக்கின் செய்கைகளைப் பற்றி கூறியுள்ளனர். அவர் சினிமா வட்டாரத்தில் பிரபலமாக இருப்பதால் வெளியே சொல்ல அனைவரும் அஞ்சுகின்றனர்’ எனக்கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்