Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு ஜோடியாகிறார் சிம்ரன்?

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (14:40 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் எப்போது வெளியாகும் என்று சரியாக தெரியவில்லை. 
 
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து படக் கூழு எந்த ஒரு தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ரஜினியும், சிம்ரனும் இதுவரை எந்த படத்திலும் சேர்ந்து நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments