Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… விநியோக உரிமைக்கு முயலும் முன்னணி நிறுவனம்!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… விநியோக உரிமைக்கு முயலும் முன்னணி நிறுவனம்!
, வியாழன், 26 மே 2022 (14:57 IST)
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ’காலத்துக்கும் நீ வேணும்’ என்கிற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ரிலீஸுக்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஷூட்டிங் செல்ல காத்திருக்கிறேன்… நடிகர் சூர்யா டிவீட்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!