Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயுடன் திருமணம் குறித்து பேசிய சிம்பு: வைரல் வீடியோ!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:07 IST)
நடிகர் சிம்புவுக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டதை அடுத்து இன்னும் அவருக்கு திருமணம் ஆகாததால் அவரது குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். அவரது பெற்றோர் சிம்புவுக்கு தகுந்த பெண்ணை பார்த்து வரும் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் சிம்பு நேற்று காதலர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தான் செல்லமாக வளர்த்து வரும் நாயிடம் தனது திருமணம் குறித்து உரையாடும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:
 
இப்பொழுதுதான் நீ வளர்ந்து வந்துள்ளாய். இனிமேல் நீ ஒரு பையனை மீட் பண்ண வேண்டும், அந்த பையனுடன் உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்க வேண்டும். அதுக்கு  எனக்கு முதலில் கல்யாணம் ஆக வேண்டும். புரிகிறதா? நான் மட்டும் தனியாக இருக்கிறேன், நீ மட்டும் ஜாலியாக இருக்கிறாய் என்றால் அது நியாயம் கிடையாது. அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நீ இரவெல்லாம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். இந்த மாதிரி சிம்புவுக்கு கல்யாணம் ஆக வேண்டும், அப்போதுதான் நாம் நம் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க முடியும், இல்லையென்றால் இருக்க முடியாது என்று. அதன் பிறகு நீ என்னிடம் கோபித்துக் கொள்ளக்கூடாது. புரிந்ததா? என் கஷ்டம் உனக்கு புரிகிறதா இல்லையா? ஏதாவது சொல்லு மேன், ஓ நீ கேர்ள் அல்லவா? என்று சிம்பு கூறியுள்ளார்.
 
சிம்புவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments