Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (11:35 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராததற்கானக் காரணம் அதன் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து இவ்வளவு பணத்தை முதலீடு செய்தால் அதைத் திரும்பப் பெறுவது கஷ்டம் என பலரும் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் துபாயைச் சேர்ந்த கண்ணன் ரவி  என்பவரிடம் இப்போது சிம்புவும் தேசிங்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் படம் குறித்த நம்பிக்கை வருவதற்காக ஒரு டீசர் காட்சியை ஷூட் செய்து தரும்படி கேட்டுள்ளாராம். அதனால் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments