Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிராஜின் அடுத்த படம்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (13:57 IST)
சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது.

 
 
கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் பிறகு, தற்போது ‘ரங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் சிபிராஜ். நிகிலா விமல் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, வினோத் என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்துக்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, ராம்ஜீவன் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, ‘மதுபானக்கடை’ படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் சிபிராஜ். புதியவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம், பொலிட்டிக்கல் சட்டையர் வகையைச் சேர்ந்தது. 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, இப்போதுதான் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார் கமலக்கண்ணன்.
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments