Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஸ்ருதிஹாசன்?

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (15:36 IST)
இந்திய அரசியல் கட்சிகள் என்றாலே அதில் வாரிசுகள் இணைவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. காங்கிரஸ், திமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் அவரவர் கட்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளனர்.
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவரது மகள் இணைவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கிய ஸ்ருதிஹாசன், 'எனக்கு இப்போதைக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்றும் தனது தந்தை கட்சி உள்பட எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் இன்னும் ஒருசில ஆண்டுகள் கழித்து அவர் கமல் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்ருதிஹாசன், விஜய்சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் ஜனநாதன் இயக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments