Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படம் மற்றும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (13:04 IST)
நடிகை ஸ்ரேயா-ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்தது. தற்போது அவர்களுடைய திருமண புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகள்,  திருவிளையாடல், ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கொஸ்சீவ்வும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். ஆண்ட்ரே பல ரெஸ்டாரண்ட்களையும் நடத்தி வருகிறார். சில வருட காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். மேலும் இவர்களது திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19ஆகிய  தேதிகளில் திருமணம் நடக்க இருப்பதாகத் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை ஸ்ரேயா மறுத்தார்.
 
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். ஆனால் இந்த திருமணத்திற்கு ஸ்ரேயாவின் அம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதனால் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட கூடாது என்ற காரணத்தினால் அவரது திருமணம் ரகசியமாக நடந்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது ஸ்ரேயாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளன.
 

All the best for your married life @shriya_saran1109 and @andreikoscheev Credits - @shriyasaranfangirl #happymarriedlifeshriyasaran #happymarriedlifeshriya @shriya_saran1109 @andreikoscheev #shriyasaran #andreikoscheev #shriyasaran360 #smile #cool #fun #joy #instagram

A post shared by ?? SHRIYASARAN360° ?? (@shriyasaran360) on


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஜமௌலி & மகேஷ் பாபு படத்தில் இணையும் ஹீரோயின் இவர்தானா?

விடுதலை 2 ஓடிடியில் ரிலீஸாகும் போது ஒரு மணிநேரம் கூடுதலாக இருக்கும்… வெற்றிமாறன் அப்டேட்!

55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன்… வைரமுத்து பகிர்ந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ‘ஓடிடி’ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்