Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ரெட்டியின் லைவ் வீடியோ; அதிர்ச்சியில் சினிமா துறை

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (15:48 IST)
சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 2 நிமிடத்திற்கும் மேலாக பேஸ்புக் லைவ்வில்  இருந்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தமிழ் சினிமா பிரபலங்களின் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகார்கள் தமிழ் சினிமா உலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.  சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும்  படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிரவைத்தார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரை நிர்வாணப்  போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவரது புகாரில் தெலுங்கு நடிகர் நானீ உட்பட பல இயக்குநர்கள் சிக்கினர்.
 
அவரது புகாரில் முதலில் சிக்கியவர் இயக்குநர் முருகதாஸ். முகநூல் பக்கத்தில்“ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ். உங்களுக்கு கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா? என்று தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், ரோஜாக் கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக அடுத்த குண்டை வீசினார். இப்படி தமிழ் சினிமா பிரபலங்களின் மீது பாலியல் புகார் கூறுகிறாரே என அதிர்ச்சியில் இருக்கும் போது நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மீது  பாலியல் புகாரை கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
 
இந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “நான் அழகாக இல்லையா..? ஒரு சிலர் என்னை அழகில்லை என சொல்கிறார்கள். அதனால் நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்