Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் முடிந்தது… அப்டேட் தந்த அஜித் பட தயாரிப்பாளர்….கடுப்பான ரசிகர்கள் !

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (20:54 IST)
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் கேட்டு சமீபத்தில் ரசிகர்கள் முதல்வருக்கு டுவீட் பதிவிட்டது எல்லோருக்கும் தெரியும்  இந்நிலையில் இன்று அஜித்தின் வலிமை படத் தயாரிப்பாளர் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்

ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு இதுநாள் வரை பதில் இல்லை என்பதும் கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தகுந்த நேரத்தில் ’வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் அஜித்துடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துவரும் இப்படம் கோடையில் வெளிவரும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஷூட்டிங் ஹைதராபாத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கொரொனா 2 வது அலைபரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளில் படப்பிடிப்பு வேண்டாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் உளநாட்டிலேயே மொத்த படப்பிடிப்புகளையும் வைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று வலிமை படத் தயாரிப்பாளார் போனி கபூர் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். இதில் வலிமை படம் பற்றிக் குறிப்பிடவில்லை. அதாவது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள வக்கீல் சாஹிப் படத்தின் தயாரிப்பாளரும் போனி கபூ என்பதால் அவர் இப்படத்தில் ஷூட்டிங் முடிந்தது எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் வலிமை அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது. அதேசமயம் எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்., விரைவில் நல்ல அப்டேட் வரும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments