இந்தியாவில் பிரதமர் மோடி பிரபலமாக இருப்பது போல் திரைத்துறையில் நீங்கள் பிரபலமடைந்துள்ளீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன...?
தீபாவளிக்கு ஹேப்பி நியூ இயர் படம் வெளியாவதையொட்டி நாடு முழுவதும் விளம்பர நிகழ்ச்சிகளில் ஷாருக்கானும் படத்தில் நடித்தவர்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம் இந்தூரில் நடந்த விளம்பர நிகழ்ச்சியின் போது - அங்குள்ள நிருபர்கள் நம்மைவிட ஜால்ராக்கள் போல - ஷாருக்கானிடம் கேட்ட கேள்விதான் இது.
நடிகர் அல்லவா. பிரமாதப்படுத்திவிட்டார்.
மோடி நாட்டின் முக்கிய தலைவராக உள்ளார். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். அப்படிப்பட்டவருடன் என்னை ஒப்பிடுவது பெருமையளிக்கிறது.
மோடி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதேபோல் நாட்டை நான் மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மோடியுடன் என்னை ஒப்பிடுவது புதிதாக இருந்தாலும் பெருமையாக கருதுகிறேன் என்றார்.
மோடியுடன் தன்னை ஒப்பிட்டால் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது தெரியாதவரல்ல ஷாருக். அதனால் உஷாராக, இந்த ஒப்பீட்டை நான் விரும்பினாலும், இதுபோன்ற கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். மோடியின் துறை வேறு, என்னுடைய துறை வேறு என்றார்.
ஷாருக் ஏன் எப்போதும் வெற்றி பெறுகிறார் என்பது தெரிகிறதா?