Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 3 படத்தை முடிக்க இன்னும் இத்தனைக் கோடி வேண்டும்… ஷங்கர் நிபந்தனை!

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (10:35 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது.

இதனால் இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா புரொடக்‌ஷன் நிறுவனம். ஆனால் இந்தியன் 3 படம் தியேட்டரில்தான் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளர். இந்நிலையில் இந்தியன் 3 படத்தை முடித்துத் தர இன்னும் 60 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகும் என ஷங்கர் கூறியுள்ளாராம். இது சம்மந்தமாக ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 3 படத்தை முடிக்க இன்னும் இத்தனைக் கோடி வேண்டும்… ஷங்கர் நிபந்தனை!

பாலிவுட்டுக்கு செல்கிறாரா இயக்குனர் வெங்கட் பிரபு?

விஜயகாந்த் நினைவஞ்சலி பற்றிய கேள்விக்கு ‘வாழ்த்துகள்’ என பதில் சொன்ன ரஜினி!

விடாமுயற்சி பாட்டில் இடம்பெற்ற சவதீகா என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா?

விடாமுயற்சி படம் சென்சாருக்கு செல்வதில் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments