Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்.. ஹீரோ யார்?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (07:41 IST)
இந்தியாவில் 1990கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. இந்நிலையில் இப்போது படத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

சோனி பிக்சர்ஸ் 200 கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடிக்கமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ஹீரோ மற்றும் மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments