Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டில் ஏன் நடிக்கவில்லை… ஷாருக் கான் அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:35 IST)
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ஷாருக் கான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பினார்.

2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் அவருக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது அவரிடம் ஏன் ஹாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அத்ற்கு அவர் “ஹாலிவுட் என்பது மிகப்பெரிய சினிமா உருவாகும் இடம். அங்கு எனக்கு வழங்கப்படும் பாத்திரம் என்பது இந்திய ரசிகர்களால் நான் பெற்ற மரியாதை மற்றும் பாராட்டுக்கு தகுதியானதாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த பாத்திரமும் எனக்கு அங்கிருந்து வரவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments