Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக் கானின் சூப்பர் ஹிட் ‘ஜவான்’ ஜப்பானில் ரிலீஸ்!

vinoth
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (08:09 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் திரையரங்குகளின் மூலமாக சுமார் 1125 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் அங்கும் சாதனைப் படைத்து வருகிறது. அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது ஜவான் திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி அங்கு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக இந்தியப் படங்கள் அங்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments