Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஜவான்'' பட ரிலீஸ் தேதியை அறிவித்த ஷாருக்கான்

Webdunia
சனி, 6 மே 2023 (18:51 IST)
ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில்,  இப்படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.

அதன்படி, இன்று ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், ரெட் சில்லி நிறுவனம் சார்பில் கவுரி கான் தயாரிப்பில்,அட்லி இயக்கத்தில் தான் நடித்துள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments