Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்துக்கு தடை - தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (10:53 IST)
ஈழப் போரின் போது இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அதனை மையமாக வைத்து, போர்க்களத்தில் ஒரு பூ என்ற படம் தயாராகியுள்ளது.


 

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, படத்துக்கு சான்றிதழ் தர மறுத்தது. அதனைத் தொடர்ந்து படக்குழு சார்பில் கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி இந்தியா-இலங்கை நட்புறவுக்கு கேடு விளைக்கும் விதமாக உள்ளது. போரில் இளம் பெண் இசைப்பிரியா கற்பழிக் கப்படுவதுபோன்ற காட்சிகள் உள்ளன என்று காரணம் கூறி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை (சென்சார்) வாரியத்துக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். வழக்கு விசாரணையின்போது தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

"புலி பார்வை ‘மெட்ராஸ் கபே என்று பல படங்களுக்கு சான்றிதழ் வழங்கும்போது, இந்த படத்துக்கு ஏன் வழங்கவில்லை? தற்போது தணிக்கை வாரியத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களா உள்ளனர். அவர்கள் யார் யார்? அவர்களது பெயர் உள்ளிட்ட அனைத்த விவரங்களையும் மத்திய தணிக்கை வாரியம் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 26–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு நோட்டீசு அனுப்புகிறோம்" என்று கூறினார்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?