நான் கிரிக்கெட்டின் தீவிர ரசிகன்… அத ஏன் செய்யல… இயக்குனர் செல்வராகவன் கேள்வி!

vinoth
செவ்வாய், 25 நவம்பர் 2025 (14:32 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார்.  இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் பற்றி அவர் கோபமாகப் பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “நான் கிரிக்கெட்டின் மிகத் திவிரமான ரசிகன். நான் இதைக் கேட்க ஆசைப்படுகிறேன். ஏன் இந்திய அணிக்குப் பும்ராவைக் கேப்டனாக்கவில்லை. ” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் அவரின் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments