Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களும் தோனி போலதான் – சிவகார்த்திகேயனுக்கு ஐஸ் வைத்த இயக்குனர்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:12 IST)
நடிகர் சிவகார்த்திகேயனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியோடு ஒப்பிட்டு டிவீட் செய்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

இரு தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பலரும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஓய்வுக்கு பின்னான வாழ்க்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ் நடிகரான சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில் ‘எங்களை ஊக்குவித்ததற்கும் மகிழ்வித்ததற்கும் நன்றி. நீங்கள் எப்போதுமே வியக்கதகு தலைவர். நீங்கள் கண்டிப்பாக வேறு ஏதேனும் வகையில் எங்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். உங்கள் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்காக காத்திருக்கிறேன்’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து அவரின் இந்த டிவீட்டை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி ‘சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்து எங்களை எல்லாம் ஊக்குவித்தும் மகிழ்வித்தும் வருகிறீர்கள். புதுமுகங்களுக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து உங்கள் களத்தில் தோனியைப் போல ஜொலிக்கிறீர்கள். நீங்கள் இருவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’  எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments