Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீயெல்லாம் என் தம்பியா? … சிம்புதான் சூப்பர் ஸ்டார் – விஜய்யை சீண்டிய சீமான் !

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (09:28 IST)
சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உணர்ச்சிபெருக்கான அரசியல் பேச்சுக்காகவேப் புகழ்பெற்றவர். அதேநேரம் விமர்சனங்களைக் கடுமையாக சொல்லாமல் நகைச்சுவை உணர்வைக் கலந்து சொல்வதிலும் வல்லவர். அந்த வகையில் அவரது பேச்சின் போது தமிழக் அரசியல் பிரமுகர்கள் பலரை கடுமையாக நக்கலடித்து விமர்சனம் வைத்துள்ளார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய சீமான், நடிகர் விஜய்யைக் கடுமையாக நக்கலாக விமர்சனம் செய்துள்ளார். சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல எனக் கூறியிருக்கிறார். மேலும் ‘சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு  முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் எனக் கூறுவது எல்லாம் அவமானம். எடப்பாடிக்கெ எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவிப் போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்…உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நன் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்….ரஜினி, கமல் பொட்டல் காட்டில் கம்பு சுற்றுபவர்கள்… தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டாராக எனது தம்பி சிம்புதான் வருவான்.. அவனை வைத்து மூன்று படங்கள் எடுக்க உள்ளேன்.. அதற்குப் பிறகுப் பாருங்கள் அவன்தான் ரியஸ் சூப்பர்ஸ்டார்.’ என அனைத்து நடிகர்களையும் கலாய்த்திருக்கிறார்.

மற்ற நடிகர்களை எல்லாம் கலாய்த்துவிட்டு சிம்புவை மட்டும் புகழ்ந்து பேசியுள்ளதால் விஜய், ரஜினி, கமல் ரசிகர்கள் அனைவரும் சீமான்ன் பேச்சால் அதிருப்தியடைந்துள்ளனர். அதே சமயம் இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் வேகமாகப் பரப்பி வருகின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments