Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக சயிஷாவுக்கு கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:14 IST)
இரண்டாவது முறையாக சயிஷாவுக்கு அந்த ஷூட்டிங் அனுபவம் கிடைத்துள்ளது.



 


‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சயிஷா. இவர் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்து வருகிறார். கோகுல் இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வந்தது. காட்சிகளை அங்கு படமாக்கியவர்கள், தற்போது பாடலை ஷூட் செய்வதற்காக ஆஸ்திரியா சென்றுள்ளனர். குளிரில் பாடல் ஷூட் செய்யப்படுவதாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சயிஷா, ‘தனக்கு இது இரண்டாவது அனுபவம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்திற்காக ஆஸ்திரியாவில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளதாக சயிஷா கூறியுள்ளார். ‘ஜுங்கா’ படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments