Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கமித்ராவில் நடிக்கிறாரா சத்யராஜ்?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (13:26 IST)
‘பாகுபலி’யில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், இன்னொரு வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’விலும் நடிக்கிறார் என்கிறார்கள்.


 

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக நடித்தார் சத்யராஜ். அவருக்கு பாகுபலியைக் கொல்லும் கேரக்டர் என்பதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன்பிறகு விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில், ‘சங்கமித்ரா’ படத்தில் அவர் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டால், ‘பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், இன்னும் உறுதி செய்யவில்லை’ என்கிறார்கள். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட வேலைகளின் இறுதியில் இருப்பதால், விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் படக்குழுவினர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

சர்ச்சைக்குரிய பாடலை நீக்கிய சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழு!

ஓடிடி தளத்தில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…!

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments