Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்துல அந்த காட்சில நானும் வருவேன்… எடிட்டிங்ல தூக்கிட்டாங்க –சதீஷ் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:03 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம்  ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்றாலும் வசூலில் கலக்கியது. திரையரங்குகள் மூலமாக சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் வருவது ரசிகர்களை எண்டர்டெயின் செய்துள்ளது. ஆனால் அந்த காட்சியில் இரண்டு பேசும் வசனத்தில் உள்ளர்த்தம் இருக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படத்தின் க்ளைமேக்ஸில் வில்லனைக் கைது செய்து கட்டிப் போட்டுவிட்டு இவனை நீங்க பாத்துக்கோங்க’ என சிவகாத்திகேயனிடம் சொல்வார் விஜய்.

அப்போது சிவகார்த்திகேயன் “உங்களுக்கு இதவிட ஏதோ ஒரு முக்கியமான வேல இருக்குன்னு போறீங்க… நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என சொல்வார். இது விஜய் சினிமாவை விட்டு செல்வதால் இனிமேல் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை நிரப்பப் போவதாக பேசுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த காட்சி பற்றி இப்போது நடிகர் சதீஷ் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த காட்சியில் விஜய் சார் போன பின்னர் நான் வருவேன். அப்போது சிவாவிடம் அப்ப உங்க இடத்த நான் பாத்துக்கட்டா எனக் கேட்பேன். ஆனால் அந்தக் காட்சியை எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள்.” எனப் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இனி படங்களுக்கு புதிய வகை தணிக்கை சான்றிதழ்! அதிரடி மாற்றங்களை செய்த மத்திய அரசு!

விடாமுயற்சி படம் ஒரே நாளில் நடக்கும் கதை… அதனால் பல பிரச்சனைகள்.. ஸ்டண்ட் இயக்குனர் கொடுத்த அப்டேட்!

அடுத்த அஞ்சானா ‘கங்குவா’.?… படக்குழு சொன்ன பில்டப்புகளைப் பாய்ண்ட் போட்டு வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சத்தம் அதிகம்.. திரையரங்கு உரிமையாளர்களிடம் VOLUME-ஐ குறைக்க சொன்ன கங்குவா தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments