Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் சிகரெட்டுடன் ரெட்ரோ லுக்கில் சசிகுமார் – கலக்கலான போஸ்டர் வெளியீடு!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (09:26 IST)
நடிகர் சசிகுமார் இப்போது நடித்து வரும் பகைவருக்கு அருள்வாய் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார், அதன் பின்னர் ஈசன் என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம், சிங்கமடா, ராஜவம்சம்m, நா நா, பரமகுரு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் 1980 களில் நடக்கும் கதையாகவும், தற்போது நடக்கும் கதையாகவும் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 80 களின் ஸ்டைலில் நீண்ட முடி மற்றும் அந்த காலத்தைய உடைகளோடு சசிகுமார் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments