Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை படைத்த 'சர்கார்' நாயகன் சிம்டாங்காரன்!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (21:35 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் உள்ளது 'சிம்டாங்காரன்' பாடல் 24ம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேர் பார்த்தனர். மேலும் ஒருமணி நேரத்திலேயே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாடலை லைக் செய்தனர்.
 
இந்த படத்தின் மொத்த பாடல்களும்  வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, நடிகர் ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
 
படத்தின் அனைத்து காட்சிகளும் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
இதனிடையே கடந்த 19ம் தேதி முதல் 'சர்கார்' கொண்டாட்டம் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சர்காரின் முதல் கொண்டாட்டமாக 'சிம்டாங்காரன்' பாடலின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்துள்ளது. தற்போது இது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments