Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் பட கதை கசிந்தது ? அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் !

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (17:56 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் 'சர்கார்' படத்தின் கதை சமூகவலைத்தளத்தில் கசிந்து வேகமாக பரவி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மற்றும் மர்மங்களுடன் உருவாகிவரும் சர்கார் படத்தில், விஜய் தோற்றம் முதல் கதை, பாடல் என அனைத்தும் ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த பாடல் ஷூட்டிங் வீடியோ ஒன்று லீக் ஆனது. இதனால் மன வருத்தத்தில் இருந்த படக்குழுவினர் இது போல் இனி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
 
ஆனால் தற்போது படத்தின் கதையே கசிந்துள்ளது."அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. 
 
சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தனது சொந்த ஊரான சென்னை வரும் விஜய்யை பத்திரிக்கையாளர்கள் விமானநிலையத்தில் சூழ்ந்துகொள்கின்றனர். பிறகு  வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது(கள்ள ஓட்டு ) என்கின்றனர். அங்குதான் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு உதவி செய்கிறார். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்கிறது. தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்பட்டத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
தமிழக தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார். இதற்காக இளைஞர்களை திரட்டி பணம் வாங்காமல் ஓட்டளிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார். அவருக்கு ஆதரவு பெருகுகிறது. பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர்.
 
பிறகு அந்த லாரியை அப்படியே லாவுகரமாக பிடித்து சென்னை கமிஷ்னர் ஆபீஸ்லில் பிடித்து கொடுக்கிறார் விஜய் .  இதனால் அரசியல்வாதிகள் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை ஏவுகிறார்கள் அதையெல்லாம் எதிர்த்து நின்று நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்கிறார்" என்பதே சர்கார் படத்தின் கதை.
 
பிறகு அவரையே தலைவராக பொறுப்பேற்க சொல்கின்றனர் மக்கள் அதற்கு விஜய் "நேரம் வரும் போது நான் கட்டாயம் வருவேன்" என்று ஒரு அரசியல் என்ட்ரி ட்விஸ்ட்டையும் கொடுத்துவிட்டு வெளிநாடு புறப்பட்டு செல்கிறார். இது தான் விஜய் நடிப்பில் வரவுள்ள சர்க்கார் படத்தின் கதை என்று  சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 
இது சர்கார் படக்குழுவினரை மட்டுமல்லாது ஓட்டுமொத்த  திரைத்துறையினரையும் மிகுந்த அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments