Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்தார்-2’ படப்பிடிப்பின்போது விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபலம்..!

Mahendran
புதன், 17 ஜூலை 2024 (10:53 IST)
கார்த்தி நடித்து வரும் 'சர்தார்-2’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி வெறும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் திடீரென இன்று நடந்த சண்டை காட்சி படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்த பட்டதாக கூறப்படுகிறது 
 
சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின் போது ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் 20 அடி உயரத்திலிருந்து குதித்ததாகவும் அப்போது அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் சிகிச்சையின் பலன் இன்றி சற்றுமுன் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்க்விட் கேம்ஸ் சீசன் 2 ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

கனடா நாட்டில் வாழும் தமிழ் பெண்ணின் போராட்டம் சொல்லும் படம் "ஆக்குவாய் காப்பாய்"

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments