Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பாட்டுக்கு 10 கோடி - பிரமாண்டமாக தயாராகும் அண்ணாச்சியின் முதல் படம்

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:57 IST)
சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் முதல் படத்தின் பாடல் ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது
 

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பர வீடியோக்களில் முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் ஆடி தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் அந்த கடையின் உரிமையாளர் சரவணன். அவர் நடித்த விளம்பரங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக அது மக்களிடமும் கேலியை  பெற்றாலும் தொடர்ந்து அவர் விளம்பரங்களில் தலைகாட்டி வந்தார்.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா ஆசை தலை தூக்கவே அதற்கான பணிகளைத் தொடங்கினார். அவரது முதல் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால் முன்னணி நடிகைகள் யாரும் அவருடன் நடிக்க சம்மதிக்காததால் புதுமுக நடிகையை தனது படத்தில் அறிமுகப்படுத்தி நானும் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை அவரை வைத்து விளம்பர படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். படத்தில் வேல்ராஜ் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பின்பு இப்போது முதல் கட்டமாக படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று படம் பிடிக்கப்பட்டு வருகிறது இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது இதற்காக செலவிடப்பட்ட தொகை 10 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது முன்னணி கதாநாயகிகளின் படங்களுக்கு செலவிடப்படும் தொகையை விட அதிகமாக செலவு செய்து இந்த படத்தை தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பாடல் காட்சி சம்பந்தமான புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments