Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமார் படங்களை இயக்குனர் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

Siva
திங்கள், 27 மே 2024 (08:14 IST)
சரத்குமார் நடித்த இரண்டு படங்களையும் மற்றும் சில தமிழ் படங்களையும் இயக்கிய இயக்குனர் ஒருவர் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ் . அதன் பிறகு சரத்குமார் நடித்த மாயி, திவான் ஆகிய படங்களையும் ஜீவன் நடித்த அதிபர் என்ற படத்தையும் இயக்கி உள்ளார்

கடந்த 2015 ஆம் ஆண்டு வருசநாடு என்ற படத்தை அவர் இயக்கிய நிலையில் அந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானதை  அடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

தனது இரண்டு படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ் காலமானது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments