Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்காவில் நடிப்பது பெருமை

Webdunia
திங்கள், 19 மே 2014 (12:42 IST)
சரியா? உண்மையா? என்று பத்திரிகையாளர்களே தடுமாறும் பல விஷங்களுக்கு சரியான பதிலை தருவது நடிகர்கள், இயக்குனர்களின் ட்விட்டர் பக்கங்கள்தான்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நடித்து வரும் லிங்காவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் யார் என்பது மர்மமாகவே இருந்தது. சந்தானம் நடிக்கிறார் இல்லை வடிவேலுதான் நடிக்கிறார் இல்லையில்லை இரண்டு பேருமே நடிக்கிறார்கள் என்று குழப்பமான தகவல்கள். இந்நிலையில், லிங்காவில் நடிப்பதை தனது ட்விட்டரில் உறுதி செய்தார் சந்தானம்.
 
லிங்காவில் நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று அவர்  ட்வீட் செய்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்குப் பிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால் சந்தானம் லிங்காவில் நடிப்பாரா என்ற சந்தேகம் 
 
இருந்து வந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் ஹீரோவாகவும், முக்கியமான நடிகர்கள், இயக்குனர்கள் படங்களில் மட்டும் நகைச்சுவை வேடமேற்பது எனவும் இரட்டைக் குதிரை சவாரியை தேர்வு செய்தார் சந்தானம். லிங்காவில் அவர் நடிக்க இந்த புது முடிவுதான் காரணம்.
 
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதுப்படம் ஜுலை மாதம் ஆரம்பமாகிறது.
 

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments