Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ருதிஹாசன் விலகல் ; சங்கமித்ரா படம் டிராப்?

ஸ்ருதிஹாசன் விலகல் ; சங்கமித்ரா படம் டிராப்?
, செவ்வாய், 30 மே 2017 (11:42 IST)
சுந்தர் சி. இயக்கத்தில் உருவாக இருந்த சங்கமித்ரா படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளியேறிவிட்டார்.


 

 
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி. இயக்குகிறார். இதில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சங்கமித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது.  
 
இப்படத்திற்காக ஸ்ருதிஹான் கடந்த சில நாட்களாக வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் கற்று வந்தார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் படவிழாவில் கொண்டாடப்பட்டது. அதில் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். 
 
இந்தப் படம் தன்னுடைய கனவு படம் எனவும், இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைக்கும் படமாக இருக்கும் என சுந்தர் சி கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகி விட்டதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அவருக்கு பதிலாக வேறொரு நடிகை இப்படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில், இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் ஏன் விலகினார் என அவர் தரப்பிலிருந்து டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் “துரதிஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் ஸ்ருதிஹாசன் இருக்கிறார். இந்த படத்திற்காக ஸ்ருதி 2 வருடம் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், படத்தின் முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு இன்னும் தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக அவருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது. 
 
அதேநேரம், ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகவில்லை. நாங்கள்தான் அவரை நீக்கிவிட்டோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன என படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், படத்தின் முக்கியபாத்திரமான சங்கமித்ரா வேடத்தில் நடிக்க இருந்த ஸ்ருதிஹாசன் விலகி விட்டதால், தற்போது அவருக்கு பதிலாக வேறொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால், 2 வருடம் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால், எந்த பெரிய நடிகையும் அதற்கு முன் வரவில்லை எனத் தெரிகிறது. எனவே, யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.
 
இதனால், இந்த படம் டிராப் ஆகிவிடும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள தனுஷின் மலையாள அறிமுகம்