Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்றைக்கும் விஜய் அண்ணாதான் –சர்கார் தொடர்பாக சாந்தனு விளக்கம்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:38 IST)
சர்கார் கதை திருட்டு விவகாரத்தினால் அதிகமாகக் காயப்பட்டது நான் தான் என நடிகர் பாக்யராஜ் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சர்கார் விஷயத்தில் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தன்னுடைய மகன் சாந்தனு தன்மீது வருத்தப்பட்டதாக பாக்யராஜ் தெர்வித்திருந்தார். தீவிர விஜய் ரசிகனான சாந்தனு தனது தாயின் மூலம் பாக்யராஜுக்கு இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுத்ததாகவும் பாக்யராஜ் கூறினார்.

இது சம்மந்தமாக பாக்யராஜ் கூறியதாவது:-

’என் மகன் என்னிடம் கோபித்துக்கொண்டதால் நான் விஜய்யிடம் பேசி சூழ்நிலையை எடுத்துக்கூறினேன். அவர் என்படமென்று நீங்கள் எந்த பாரபட்சமும் காட்டவேண்டாம். சங்கத்தலைவராக என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள் எனக் கூறினார். ஆனால் இந்த விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் விஜய் ரசிகர்கள் என் மகனைப் பற்றி தவறாகப் பேசிவருகின்றனர். அது போன்ற செயல்களைத் தொடரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்’


விஜய் ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்ட சாந்தனு டிவிட்டரில் இப்போது விஜய் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் ! Apologies on Story reveal by appa unavoidable cirumstance Sincere apologies though தீபாவளியை கொண்டாடுவோம் Sarkar கொண்டாடுவோம் ! ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments