Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நடிகரான சமுத்திரக்கனி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (10:50 IST)
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இப்போது அதிகளவில் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி சுப்ரமண்யபுரம் படத்தின் மூலமாக நடிகராக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின்னர் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்திய அவர் ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய வெற்றி பெறாததால் நடிப்பில் அதிக கவனம் செலுத்து தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகரானார்.

இதையடுத்து அவருக்கு தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அலா வைகுந்தபுரம்லு படத்தில் வில்லனாக நடித்து அங்கேயும் கொடி நாட்டினார். அதன்பின்னர் இந்தியாவின் பிரம்மாண்டமான படமான ஆர் ஆர் ஆர் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவருக்கு அங்கே செம்ம டிமாண்ட் உருவாகியுள்ளதாம். முன்னணி கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவரை புக் செய்ய ஆர்வம் காட்டுவதால் கையில் பல தெலுங்கு படங்கள் வைத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments