Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 ரீமெக்கில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகல்? சமந்தாவின் அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (12:58 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்பும் நடிகை சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 


 
திருமணத்துக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம், யூ-டர்ன், சீமராஜா , சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டாலும் வசூலில் பின்தங்கிவிட்டது. ஆனால், தற்போது சமந்தா நடிப்பில் தெலுங்கி வெளியான  'ஓ பேபி' படம் வெற்றிப் படமாக அமைந்தது.
 
இந்நிலையில் சமந்தாவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது 2020ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்துள்ளதாக சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன் கடைசியாக 96 ரீமேக்கில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவுக்கு டாட்டா சொல்லப்போகிறாராம். 
 
அதன் பின் சில ஆண்டுகளில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தை பெற்ற பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் சினிமாவிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments