Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளங்களில் கவர்ச்சி..... சமந்தா அதிர்ச்சி.........

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (11:58 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தாவின் கவர்ச்சி புகைபடங்கள் இணையதளங்களில் உளா வந்து கொண்டிருப்பதால், சமந்தா வருத்தத்தில் உள்ளார்.




நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. செப்டம்பர் 23-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், சமந்தாவின் கவர்ச்சிப் படங்களும் இணையதளங்களில் பரவி அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா சினிமாவில் அறிமுகமான புதிதில் பிரபலமில்லாத சிறிய நடிகர்களுடன் நடித்தார்.

அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று ‘மாஸ்கோவின் காவேரி’. அந்த படத்தில் காதல் மற்றும் படுக்கை அறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படம் 2010-ல் வெளிவந்து தோல்வி அடைந்தது. அந்த படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சிகளை தற்போது இணையதளங்களில் யாரோ வெளியிட்டு அவை வேகமாக பரவி வருகின்றன.

அத்துடன் சமந்தாவின் தற்போதைய மார்க்கெட் உயர்வு நிலவரத்தை கருத்தில் கொண்டு தோல்வி அடைந்த அந்த படத்தை தூசி தட்டி மீண்டும் மறு வெளியீடு செய்து காசு பார்க்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இது சமந்தாவை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதனை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்