Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின் ரி எண்ட்ரி திரைப்படம் பற்றி வெளியான தகவல்!

vinoth
திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:25 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார்.

இதையடுத்து அவர் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மையோசிடிஸ் பாதிப்பால் சிகிச்சை எடுத்து வந்த சமந்தா அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது ரி எண்ட்ரி படமாக ராம்சரண் படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments