Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி திருப்பதிக்கு விசிட் அடிக்கும் சமந்தா: என்னவா இருக்கும்?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (18:42 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சென்று வந்துள்ளார் சமந்தா. 

 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். 
 
எப்போதும் போல கேஷுவலான கதாபாத்திரங்களில் நடிக்காமல் பொருப்புடன் கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்நெடுத்து அடுத்த அடுத்த வெற்றிகளை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார். 
 
தற்போது தமிழில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சென்று வந்துள்ளார். 
பெருமாளை தரிசனம் செய்த பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தாவுடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். 
 
திருமணத்திர்கு பிறகு திருப்பதி செல்வதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா. மாமனார் குடும்பத்தில் உள்ள அனைவரும் படம் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதிக்கு செல்வதை தற்போது சமந்தாவும் பின்பற்றி வருகிறார் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments